தேர்வுத் துறை இயக்குநர் க.சசிகலா, அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: தமிழகத்தில் பிளஸ்-2, பிளஸ்-1 (அரியர்) மற்றும் பத்தாம் வகுப்புபொதுத் தேர்வுகள் மார்ச் 2 முதல் ஏப்.6-ம் வரை நடைபெறுகிறது.
இந்த பொதுத் தேர்வு வினாத்தாள்கள் சார்ந்து ஏதேனும் கருத்து இருப்பின் அது தொடர்பாக ஆசிரியர்கள், மாணவர்களின் கருத்துகளைப் பெற்று தெரிவிக்க வேண்டும்.
அதாவது கேள்வி சரியில்லை என்று பொதுப்படையாக கூறாமல் எந்த வினாவில் தவறு அல்லது முரண்பாடு உள்ளது என்பதை குறிப்பிட வேண்டும்.
தேர்வு நடைபெற்ற நாளிலேயே அந்தந்த பாடம் சார்ந்த கருத்துகளை தெரிவிக்கவேண்டும். இவ்வாறு இல்லாமல் கேள்வித்தாளில் முரண்பாடு, தவறு உள்ளது என்று பொதுப்படையாக கூறுவது தவிர்க்கப்பட வேண்டும். இந்த தகவல்களை அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.