WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, December 29, 2025

TET முடிவுகள் 2025 : தவறான கேள்விக்கு 1 மதிப்பெண்; விரைவில் வெளியாகும் முடிவுகள், அறிந்துகொள்ளுவது எப்படி?

தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) கடந்த மாதம் நவம்பர் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதற்கான உத்தேச விடைக்குறிப்பு மீதான ஆட்சேபனை டிசம்பர் 3-ம் தேதி வரை பெறப்பட்ட நிலையில், இதற்கான முடிவுகள் விரைவில் வெளியாக உள்ளது. டெட் தேர்வை எழுதியவர்கள் https://trb.tn.gov.in/ என்ற இணையதளத்தில் முடிவுகள் வெளியானதும் அறிந்துகொள்ளலாம்.

பொங்கல் பண்டிகையன்று நடக்கவிருந்த சிஏ தேர்வு தள்ளிவைப்பு.

 

இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டம்: சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு.

 

Saturday, December 20, 2025

புத்தாண்டு விடுமுறை முடித்து வரும் மாணவர்களுக்கு கையில் லேப்டாப்.

 தமிழ்நாடு பட்ஜெட் 2025-26-இல் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, நடப்பு கல்வி ஆண்டில் இறுதி ஆண்டு படிக்கும் 10 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு தமிழக அரசு மூலம் இலவச லேப்டாப் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிசம்பர் 19-ம் தேதி தொடங்க வைக்க உள்ளார். இந்நிலையில், மாணவர்களுக்கு இன்பதிர்ச்சி அளிக்கும் விதமாக, விடுமுறையை முடித்து கல்லூரிக்கு திரும்பியதும் விலையில்லா மடிக்கணினி மாணவர்களுக்கு அளிக்கப்படும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுமட்டுமின்றி, மாணவர்களுக்கு மற்றொரு மகிழ்ச்சி செய்தியாக Perplexity Pro AI வசதி 6 மாதக் காலத்திற்கு மாணவர்களுக்கு கட்டணமில்லாமல் வழங்கப்பட உள்ளது.

ஆசிரியர்களை குழப்பும் 'திறன் கல்வித் திட்டம்'.