WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, July 20, 2014

கூட்டுறவுத் துறை இளநிலை பணிக்கான தேர்வு: விடைகளை வெளியிட உயர்நீதிமன்றம் உத்தரவு

கூட்டுறவுத் துறை இளநிலை உதவியாளர் பணித் தேர்வுக்கான விடைகளை


வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கூட்டுறவுத் துறை இளநிலை உதவியாளர் பணிக்காக தமிழக கூட்டுறவுத் துறை பணியாளர் ஆணையம் கடந்த 2012-ஆம் ஆண்டு நவம்பர் 2-ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. இந்தத் தேர்வுக்காக 2.80 லட்சம் பேர் விண்ணப்பித்தனர்.

இதில், 2.23 லட்சம் பேர் தேர்வு எழுதினர். இதில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான பட்டியல் அதே ஆண்டு டிசம்பர் மாதம் 20-ஆம் தேதி வெளியிடப்பட்டது. ஆனால், இந்தத் தேர்வுக்கான விடைகள், கட் ஆஃப் மதிப்பெண்கள் வெளியிடப்படவில்லை. இந்த நிலையில் இந்தத் தேர்வில் பங்கேற்ற பலர் வினாத் தாள்களின் விடைகள், கட் ஆஃப் மதிப்பெண்களை வெளியிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி (பொறுப்பு) சதீஷ் கே.அக்னிஹோத்ரி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு முன்பு நடந்தது.

விசராணைக்குப் பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

இந்த வழக்கின் அடிப்படையில், ஏற்கெனவே நடத்தப்பட்ட தேர்வுக்கான விடைகளை கூட்டுறவுத் துறை பணியாளர்கள் தேர்வாணையம் வெளியிட வேண்டும். மேலும், தேர்வுக்கான கட் ஆஃப் மதிப்பெண்களை தேர்வர்களின் கட் ஆஃப் மதிப்பெண்களுடன் சேர்த்து வெளியிட வேண்டும். மேலும், எதிர்காலத்தில் காலிப் பணியிடங்களை நிரப்பும்போது தகுந்த முறைப்படி தேர்வு நடத்த வேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.