WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, September 9, 2014

1,047 காலி பணியிடங்களுக்கான குரூப்–2 முதல் நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு

1,047 காலி பணியிடங்களுக்காக நடத்தப்பட்ட குரூப்–2 முதல் நிலை தேர்வு
முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது.

குரூப்–2

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த குடிமை பணி தேர்வு–2–ல்(குரூப்–2) துணை வணிகவரி அலுவலர், சார்பதிவாளர் நிலை–2, தொழிலாளர் உதவி ஆய்வாளர், நிதித்துறையில் உதவிப்பிரிவு அலுவலர், சட்டத்துறையில் உதவிப்பிரிவு அலுவலர், கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர், வருவாய் உதவியாளர் உள்ளிட்ட துறைகளில் காலியாக உள்ள 19 பதவிகளுக்கான 1,047 பணியிடங்களுக்காக, கடந்த ஆண்டு டிசம்பர் 1–ந் தேதி தேர்வு நடந்தது.

இந்த தேர்வு தமிழகம் முழுவதும் 114 நகரங்களில், 2 ஆயிரத்து 269 தேர்வு மையங்களில் நடந்தது. 4 லட்சத்து 98 ஆயிரத்து 471 பட்டதாரிகள் தேர்வு எழுதினர். முதல் நிலை தேர்வு முடிவுகள் நேற்று இரவு வெளியிடப்பட்டது. இதில், 11,497 பேர் தேர்ச்சி பெற்று, அடுத்தக்கட்ட முதன்மை தேர்வுக்கு தேர்வாகி உள்ளனர். அவர்களின் விவரம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:–

11,497 பேர் தேர்ச்சி

குரூப்–2–ல் காலியாக உள்ள 19 பதவிகளுக்கான 1,047 காலி பணியிடங்களுக்கான முதல் நிலை எழுத்து தேர்வு கடந்த ஆண்டு டிசம்பர் 1–ந் தேதி நடந்தது. தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இட ஒதுக்கீடு விதி மற்றும் அப்பதவிகளுக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் முதன்மை எழுத்து தேர்விற்கு தேர்வு செய்யப்பட்ட 11,497 விண்ணப்பதாரர்களின் பதிபெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய வலைவளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. முதன்மை எழுத்து தேர்வு நவம்பர் 8–ந் தேதி காலை மற்றும் மதியம் நடைபெறும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் மாதம் 8–ந் தேதி நடக்கும் முதன்மை தேர்வில் வெற்றி பெறுகிறவர்கள், அடுத்தபடியாக நேர்முக தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்முகத் தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு அரசு பணிகள் வழங்கப்படும்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.