WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, September 9, 2014

டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முடிவு வெளியீடு: நவம்பரில் பிரதான தேர்வு

டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முடிவுகள் திங்கட்கிழமை வெளியாயின. இதில்,
11,497 பேர் பிரதான தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி), கடந்த 2013, டிச.1ம் தேதி குரூப்-2 தேர்வை நடத்தியது. இதில், தொழிலாளர் உதவி ஆய்வா ளர், நிதித்துறையில் உதவிப் பிரிவு அலுவலர், சட்டத்துறை யில் உதவிப் பிரிவு அலுவலர், கைத்தறி ஆய்வாளர், கூட்டு றவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர் உள்பட பல்வேறு துறைகளில் உள்ள 19 பதவிக ளுக்கான 1,047 பணியிடங்களுக்கு நடைபெற்ற முதல்நிலைத் தேர்வை 4,98,471 பேர் எழுதினர். 
இதற்கான முடிவுகள் திங்கட்கிழமை வெளியிடப் பட்டது. இதில், 11,497 பேர் பிரதான தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர். பிரதான தேர்வு வரும் நவ.8ம் தேதி நடைபெறுகிறது. தேர்வு பெற்றவர்கள் பட்டியல், டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (www.tnpsc.gov.in) பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். 

இத்தகவல், டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் ஷோபனா வெளியிட்டுள்ளார் 
11,497 பேர் பிரதான தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர். பிரதான தேர்வு வரும் நவ.8ம் தேதி நடைபெறுகிறது. 

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.