WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, September 9, 2014

மதிப்பெண் சான்று உண்மையா? : ஆன்-லைனில் அறிய வாய்ப்பு!!

மதிப்பெண் சான்றுகளின் உண்மை தன்மை அறிய, அரசு தேர்வுகள் இயக்ககம்,
'ஆன்-லைன்' முறையை, விரைவில் கொண்டு வருகிறது. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு மதிப்பெண் பட்டியலை, அரசு தேர்வுகள் இயக்ககம் வழங்குகிறது. பணியில் சேரும்போது, இந்த சான்றிதழ்கள் முக்கிய ஆவணம். இதன் உண்மை தன்மையை அறிய, அரசு தேர்வுகள் இயக்ககத்துக்கு, மீண்டும் அனுப்பி உறுதி செய்யப்படுகிறது. இது போல், அரசு தேர்வுகள் இயக்ககத்துக்கு, ஆயிரக்கணக்கான சான்றுகள் வருவதால், அவற்றை சரி பார்ப்பதில், பெரும் தாமதம் ஏற்படுகிறது. இதை தீர்க்க, ஆன்-லைன் மூலம், கல்வி சான்றுகளின் உண்மை தன்மை அறியும் வகையில், புதிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கல்வியாண்டுகள் வாரியாக, சான்றிதழ்கள் கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. மதிப்பெண் சான்றிதழில் உள்ள மாணவர் பெயர், பிறந்த தேதி, கோடு எண் மற்றும் தேர்வு பதிவு எண்களை குறிப்பிட்டு விண்ணப்பித்தால், பதிலை, ஆன்-லைனில் உடனே உறுதி செய்து விடும் வகையில், திட்டம் விரைவில் நடைமுறைக்கு வர உள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.