சென்னை : 'டிப்ளமோ நர்சிங்' கலந்தாய்வுக்கான, மாணவர்களின் தர வரிசை
பட்டியலை, மருத்துவக்கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது. அடுத்த வாரத்தில், கலந்தாய்வு நடக்கும் என, தெரிகிறது. தமிழகத்தில், 23 நர்சிங் கல்லூரிகள் உள்ளன. இதில், இரண்டு ஆண்டு டிப்ளமோ நர்சிங் படிப்புக்கு, 2,000 இடங்கள் உள்ளன. இதற்கு, 8,200 பேர் வரை விண்ணப்பித்தனர்.
இதில், 8,101 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு உள்ளன. அடுத்த வாரத்தில், கலந்தாய்வு நடக்கும் என, தெரிகிறது. இந்த நிலையில், மாணவர்களின் தரவரிசைப் பட்டியலை அரசு வெளியிட்டுள்ளது. பிளஸ் 2 வகுப்பில், அறிவியல் பிரிவு பிரிவு படித்தோர் 6,799 பேர்; நர்சிங் தொழில் பிரிவு படித்தோர் 589 பேர்; இதர பிரிவுகளில் படித்தோர் 713 பேர் என, மொத்தம், 8,101 பேர் இடம் பெற்றுள்ளனர். 'இதுபற்றிய விவரங்களை, tn.gov.in, ttn.health.org என்ற இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்' என, மருத்துவக்கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.