தஞ்சாவூர்: ஒருங்கிணைந்த பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின், மாநில அவசர
ஆலோசனைக் கூட்டம், தஞ்சையில் நடந்தது. புவியியல் பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் ராமதாஸ் தலைமை வகித்தார். பதிவு மூப்பு பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்ட பொறுப்பாளர் செல்வமணி, வேலையில்லா பட்டதாரி தமிழாசிரிய சங்க மாநில தலைவர் ராமு ஆகியோர் முன்னிலை வகித்தார். ஆசிரியர் தகுதித் தேர்வை நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. இதனால், பல ஆண்டுகளாக ஆசிரியர் பயிற்சி பெற்று வேலைக்காக காத்திருப்போர் பணிபெற முடியாமல் உள்ளது. தற்போது, ஆசிரியர் பயிற்சியை பெற்றவர்களும், நியமனம் பெற முடியாத சூழல் உள்ளது. இதனை, முதல்வர் பரிசீலனை செய்து, யாருக்கும் பாதிப்பு ஏற்படுத்தாத வகையில், பழைய நடைமுறையில் பதிவு மூப்பு முறையில் ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும். கடந்த, 2010ம் ஆண்டு சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களில் நியமனம் பெற்றவர்கள் போக, 6,000 பட்டதாரி ஆசிரியர் பணி காலியாக உள்ளது. இதில், கடந்த, 2012ம் ஆண்டு ஜூன், 23ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டு நியமனம் பெற்றவர்கள் போக, நிலுவையில் உள்ள, 700 பட்டதாரி தமிழாசிரியர்களுக்கும் பணி நியமனம் வழங்க வேண்டும்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி வரும், 29ம் தேதி சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும், என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில், தமிழாசிரிய சங்க மாநில செயலாளர்கள் சந்திரசேகரன், அரசுமணி, ஒருங்கிணைப்பாளர்கள் சுந்தர், சாமுவேல், சங்கர், மாவட்ட பொறுப்பாளர்கள் சங்கர், இளவரசன், பழனியாயி, ஹைதர்அலி, ஸ்ரீராம், செயற்குழு உறுப்பினர் சுப்புலெட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.