WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, September 9, 2014

விடைத்தாளில் கமென்ட் ஆசிரியர்களுக்கு தடை

மாணவர்களின் விடைத்தாளில் மிக நன்று, மோசம் என்று கருத்து
தெரிவிக்கக்கூடாது என ஆசிரியர்களுக்கு சி.பி.எஸ்.இ உத்தரவிட்டுள்ளது.
மத்திய கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:

சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு நடத்தப்படும் தேர்வுகளில் அவர்கள் பெற்ற மதிப்பெண்களுக்கு ஏற்ப மிக நன்று, நன்று, மோசம், கவலை அளிக்கிறது என ஆசிரியர்கள் குறிப்பு எழுதி வந்தனர். வருங்காலங்களில் ஆசிரியர்கள் கமென்ட் எழுதக்கூடாது. மாறாக மாணவர்களை கவரும் வகையில் நட்சத்திரம், ஐந்து நட்சத்திரம், சித்திரங்கள் (கார்ட்டூன்) போன்றவற்றை குறிப்பிட்டு ஊக்குவிக்க வேண்டும். இதனால் ஒரு தேர்வில் சரியாக படிக்காத மாணவர்கள் கூட மறு தேர்வில் நன்றாக படித்து விடையளிக்க முடியும்.

அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள் மத்தியில், குறைவான மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு ஏற்படும் தாழ்வு மனப்பான்மையை நீக்கலாம். இதேபோல் எதிர்மறையான எண்ணங்கள் தோன்றாமல் தடுக்கலாம். எனவே, ஆசிரியர்கள் மாணவர்களை பாதிக்கும் வகையிலான கருத்துக்களை தெரிவிக்கக்கூடாது.

இவ்வாறு அதில் கூறப் பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.