WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, September 16, 2014

பிளஸ் 2 மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வுகள் நேற்று தொடங்கியது: அதிகாரிகள் கண்காணிப்பு

பிளஸ்1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டுத்  தேர்வுகள் நேற்று
தொடங்கியது. மற்ற வகுப்புகளுக்கான காலாண்டுத்  தேர்வு 19ம் தேதி தொடங்க உள்ளது. பள்ளி மாணவர்களுக்கான  காலாண்டுத் தேர்வுகள் தொடர்பான கால அட்டவணை கடந்த மாதம்  வெளியானது. அதன்படி, பிளஸ்1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான  காலாண்டுத் தேர்வுகள் 15ம் தேதி தொடங்கி 26ம் தேதி முடிவடைகிறது.  பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு 17ம் தேதி தொடங்கி 26ம் தேதி  முடிவடைகிறது. இந்நிலையில், உள்ளாட்சி தேர்தல்கள் நடப்பதை  அடுத்து 17, 18ம் தேதி நடக்க இருந்த தேர்வுகள் அக்டோபர் 7, 8ம்  தேதிகளுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு தேர்வுகள் ஏற்கனவே அறிவித்தபடி நேற்று  தொடங்கின. பத்தாம் வகுப்புக்கான தேர்வு 19ம் தேதி தொடங்கும்.  அதேபோல மற்ற வகுப்புகளுக்கான தேர்வுகளும் 19ம் தேதி தொடங்கும்.  நேற்று தொடங்கிய பிளஸ் 2 வகுப்புகளுக்கான தேர்வுகளில் குழப்பம்  ஏதும்  ஏற்படாமல் கண்காணிக்க பள்ளிக் கல்வித்துறை இயக்குநர்,  தொடக்க கல்வி இயக்குநர் ஆகியோர் தலைமையில் இணை  இயக்குநர்கள் கொண்ட அதிகாரிகள் அனைத்து மாவட்டங்களுக்கும்  மேற்பார்வை பணியில் ஈடுபட்டுள்ளனர்.


No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.