மதுரை : பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்திற்கு, தனி
நீதிபதி தடை விதித்ததை எதிர்த்து, அரசுத் தரப்பில் மேல்முறையீடு செய்ததை, நேற்று அவசர வழக்காக விசாரணைக்கு ஏற்க மறுத்து, மதுரை ஐகோர்ட் கிளை, இன்று விசாரிக்க உள்ளது.
புதுக்கோட்டை, காதக்குறிச்சி, தமிழரசன் தாக்கல் செய்த மனுவில், ''ஆசிரியர் தேர்வில், வெயிட்டேஜ் மதிப்பெண் முறையால், பணிவாய்ப்பு கிடைக்கவில்லை. அந்த முறையை ரத்து செய்ய வேண்டும்,'' என, குறிப்பிட்டிருந்தார். இது போல் மேலும், 17 பேர் மனு செய்திருந்தனர்.
இதை விசாரித்த மதுரை ஐகோர்ட் கிளை நீதிபதி, ''கவுன்சிலிங் நடத்த தடையில்லை. பணி நியமனங்கள் வழங்கப்பட்டிருந்தால், வேலையில் சேர தடை விதிக்கப்படுகிறது,'' என, நேற்று முன்தினம் உத்தரவிட்டார். இதையடுத்து, மதுரை ஐகோர்ட் கிளையில், நீதிபதிகள் எம்.ஜெய்சந்திரன், ஆர்.மகாதேவன் அடங்கிய, 'பெஞ்ச்' முன், நேற்று மாலை, அரசு அட்வகேட் ஜெனரல் சோமயாஜி ஆஜரானார்.
அட்வகேட் ஜெனரல்: தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து, மேல்முறையீடு செய்கிறோம். வெயிட்டேஜ் மதிப்பெண்ணை எதிர்த்து தாக்கலான வழக்கு, சென்னை ஐகோர்ட் பெஞ்சில் நிலுவையில் உள்ளது. அங்கு தடை விதிக்கப்படவில்லை. 10ம் வகுப்பு, பிளஸ் 2வில், ஆசிரியர்களை நியமிக்க வேண்டியுள்ளது. மேல்முறையீட்டு மனுவை, அவசர வழக்காக விசாரணைக்கு ஏற்க வேண்டும்.
நீதிபதிகள் அளித்த உத்தரவில், 'உரிய ஆவணங்கள் இன்றி, விசாரிக்க முடியாது. இன்று விசாரணைக்கு எடுக்கப்படும்' என்றனர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.