WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, September 4, 2014

ஆசிரியர் தினம்: முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து .



                 



ஆசிரியர் தினத்தை ஒட்டி முதல்வர் ஜெயலலிதா தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி: ஆசிரியராகத் தன்னுடைய வாழ்வைத் தொடங்கி இயதியக் குடியரசுத் தலைவராக உயர்யத தத்துவ மேதை டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் திங்கள் 5-ஆம் நாளை ஆசிரியர் தினமாக கொண்டாடி மகிழும் அனைவருக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

“நாட்டின் எதிர்காலம், பள்ளி வகுப்பறைகளிலேயே தீட்டப்படுகின்றது” என்று ஆசிரியப் பணியின் உயர்வினை டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன் அவர்கள் புகழ்ந்துரைத்துள்ளார். ஆசிரியப் பணி என்பது வெறும் கல்வியை மட்டும் கற்பிப்பதல்ல - நல்லொழுக்கத்தையும், சிறந்த பண்பையும், பொது அறிவையும், சமூக சிந்தனைகளையும் மாணவச் சமுதாயத்திற்கு கற்பிப்பதாகும்.

எதிர்கால இந்தியாவின் தூண்களான மாணவச் செல்வங்களுக்கு தரமான கல்வியை அளிப்பதுடன், அவர்களை சிறந்த குடிமக்களாக உருவாக்கிடும் மகத்தான பணியினை ஆற்றி வரும் ஆசிரியர்களைப் பாராட்டி தமிழக அரசு ஆண்டுதோறும் நல்லாசிரியர் விருது வழங்கி சிறப்பித்து வருகிறது. தமிழக அரசு சிறந்த கல்வியை மாணவர்களுக்கு வழங்கிடும் வகையில் கடந்த மூன்று ஆண்டுகளில் 53,288 ஆசிரியர்களை பணி நியமனம் செய்துள்ளது.

மேலும், 14,700 ஆசிரியர் பணியிடங்கள் தற்போது நிரப்பப்பட்டு வருகின்றன. ஆசிரியர் பெருமக்களின் நல்வாழ்விற்காக பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி

“எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்” என்று ஆசிரியர் பெருமக்களை பெருமைப்படுத்தி கூறுவதற்கேற்ப, மாணவர் சமுதாய மேம்பாட்டிற்கென இடை விடாது உழைத்திடும் ஆசிரியப் பெருமக்களின் கல்விப் பணி மேன்மேலும் சிறந்தோங்கிட வேண்டுமென வாழ்த்தி, அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது ஆசிரியர் தின நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன் என வாழ்த்துச் செய்தியில் முதல்வர் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

4 comments:

  1. happy teachers day to all the teacher serve for nation

    ReplyDelete
  2. எளிய தீர்வு...

    தேசிய ஆதிதிராவிடர் நல வாரியத்திடம்...
    இந்த weightage பிரச்சனையை கொண்டு செல்ல வேண்டும்..weightage முறையால் வன்கொடுமை...

    அரசு 5% தளர்வு வழங்க கையாண்ட அதே வழி...


    மக்கள் நலனில் அக்கறை கொண்ட நலவாரியம் கண்டிப்பாக குரல் கொடுக்கும்...


    உடனடியாக தீர்வு கிடைக்கும்...

    ReplyDelete
  3. அனைத்து புதிய ஆசிரியர்களுக்கும், கல்விக்குயில் நண்பர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!!!

    நானும் முதன் முதலாக அரசுப்பள்ளியின் ஒரு முதுகலை ஆசிரியராக!!!

    மதிப்புமிக்க இத்திருநாளை பணியில் சேர்ந்த 5 வது நாளிலே கொண்டாடி மகிழ உள்ளேன்...

    இறைவனுக்கு எனது மனமார்ந்த நன்றி!!!

    மேலும் TET PAPER1மற்றும் PAPER2 நண்பர்களும் விரைவில் பணி நியமனம் பெற்று பணியில் சேர இறைவனை வேண்டிக்கொள்கிறேன்!! நன்றி!!!

    ReplyDelete

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.