WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, September 16, 2014

காலாண்டு தேர்வை உரிய நேரம் வரை எழுதாத மாணவர் விபரம் சேகரிப்பு

காலாண்டு தேர்வை உரிய நேரம் வரை எழுதாமல் நடுவில்
விடைத்தாள்களை கொடுத்து செல்லும் மாணவர்களின் பெயர், விபரம் சேகரிக்கப்படுகிறது என முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு செப்.26ம் தேதி வரை காலாண்டு தேர்வுகள் நடைபெறுகின்றன. காலாண்டு தேர்வை பொதுத்தேர்வு போல நடத்த அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இது குறித்து விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் கூறுகையில், காலாண்டு தேர்விற்கு அறைக்குள் வரும் மாணவர்களை சோதனையிட்டு உள்ளே அனுப்ப வேண்டும். ஆசிரியர்கள் தேர்வு நேரத்தில் சுற்றி வர வேண்டும். அனுமதிக்கப்பட்ட நேரம் வரை மாணவர்கள் தேர்வு எழுத வேண்டும். முன்கூட்டியே விடைத்தாள்களை தந்து வெளியே செல்லக்கூடாது. அவ்வாறு வெளியேறும் மாணவர்களின் பெயர், விவரம் சேகரிக்கப்படுகிறது.

தேர்வு நேரத்திற்கு முன்னதாக வெளியேறும் மாணவர்கள் உரிய முறையில் பாடங்களை படிக்கவில்லை என கருதப்படும். விடைத்தாள் குறிப்புகள் தயாரித்து பள்ளிகளுக்கு அனுப்பப்படும் என்றார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.