WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, September 14, 2014

காலியிடத்திற்கு ஏற்ப ஆசிரியர் தகுதி தேர்வு : முன்னுரிமை வழங்க மாணவர்கள் கோரிக்கை

தமிழக அரசு காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு ஏற்றவாறு,
ஆசிரியர்களை தேர்வு செய்யவேண்டும் என ஆயக்குடி இலவச பயிற்சி மைய மாணவர்கள்கோரிக்கைவிடுத்துள்ளனர். தமிழகத்தில் 2012 ல் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற்றது. அதில் 19 ஆயிரம் பேர் வெற்றிபெற்றனர். அப்போதிருந்த காலிபணியிடங்கள் நிரப்பப்பட்டன. இந்நிலையில் 2013 ல் நடந்த டி.இ.டி., தேர்வில் 27 ஆயிரம் பேர் வெற்றி பெற்றனர்.

அரசு, மதிப்பெண் சலுகை வழங்கியதால், அது 45 ஆயிரமாக மாறியது. தற்சமயம் மொத்தம் 72 ஆயிரம் பேர் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றிபெற்று பணிக்காக காத்திருக்கின்றனர். இவர்களுக்கு வெயிட்டேஜ் முறையில் பணி வழங்கப்படுகிறது. இது ஒருசாராருக்கு சாதகமாகவும், மற்றவர்களுக்கு பாதகமாகவும் உள்ளதாக மாணவர்கள் கருதுகின்றனர். ஆகையால், ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-1, தாள்-2, ஆகியவற்றில் வினாக்களின் எண்ணிக்கையை அதிகரித்து, தேர்வு நடத்த வேண்டும். மற்ற போட்டிதேர்வுகளைப் போல காலி பணியிடங்களுக்கு ஏற்ப முதலிடம் பெறுபவர்களுக்கு மட்டும் வாய்ப்பு அளிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என ஆயக்குடி இலவச பயிற்சி மைய மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.