நடப்பு கல்வி ஆண்டில் புதிதாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளின் பட்டியலை
வெளியிட வேண்டும்,' என முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தியுள்ளது.
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் பணி நிறைவு, பதவி உயர்வு பெற்றோருக்கு பாராட்டு விழா, மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சந்திரன் தலைமை வகித்தார். அமைப்பு செயலாளர் தனுஷ்கோடி வரவேற்றார். மாநில துணைத் தலைவர் பாஸ்கர் முன்னிலை வகித்தார்.மாநிலத் தலைவர் சுப்பையா மற்றும் பலர் பங்கேற்றனர். புதிய தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகளின் பட்டியலை வெளியிட வேண்டும். முதுகலை ஆசிரியர்களுக்கு இரண்டாம் கட்ட கவுன்சிலில் நடத்த வேண்டும் என்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆசிரியர் பழனிவேல்ராஜன் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.