ஆசிரியர் தேர்வு வாரிய நடைமுறைகளை எதிர்த்துத் தொடரப்பட்டுள்ள
வழக்குகளை விரைந்து முடிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் பட்டதாரி ஆசிரியர்கள் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனர்.
இதுகுறித்து அனைத்து பட்டதாரி ஆசிரியர்களின் ஒருங்கிணைப்பாளர் செல்லதுரை கூறியது: பணி நியமனத்தில் தகுதிகாண் முறையை ரத்து செய்ய வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களில் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம்.
தொடர்ந்து 19-ஆவது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நாங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகளைத் தொடர்ந்துள்ளோம். அந்த வழக்குகளின் விசாரணைகள் நிலுவையில் உள்ளன.
தற்போது வழங்கப்படும் பணி நியமனங்கள் இந்த வழக்குகளின் தீர்ப்புக்கு உள்பட்டது. எனவே இந்த வழக்குகளை விரைந்து விசாரிக்க வேண்டும் எனக் கோரி தலைமை நீதிபதி அலுவலகத்தில் மனு அளித்தோம் என்றார் அவர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.