WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, September 7, 2014

இந்த ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வு நடக்குமா?இதுவரை அறிவிப்பு இல்லாததால் சந்தேகம்??

கடந்த ஆண்டு நடந்த டி.இ.டி., (ஆசிரியர் தகுதி தேர்வு) தேர்வு பிரச்னையே, இன்னும்
தீராத நிலையில் இருப்பதால், நடப்பு ஆண்டில், மேலும் ஒரு புதிய டி.இ.டி., தேர்வு நடத்துவது குறித்து, இதுவரை சிந்திக்கவில்லை' என, ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரம் தெரிவித்தது.


        Visit கல்விக்குயில் For
    No1Edu&Employ News In TN.
இதுவரை, புதிய தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகாமல் இருப்பது, பட்டதாரிகளை ஏமாற்றம் அடைய வைத்துள்ளது. இலவச மற்றும் கட்டாய கல்வி சட்ட விதிமுறைகளை, தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் (என்.சி.டி.இ.,) கொண்டு வந்தது.
2009ல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சட்டம், தமிழகத்தில், 2010ல் அமலுக்கு வந்தது. 2011ல், தமிழக அரசு, விதிமுறைகளை வெளியிட்டது. என்.சி.டி.இ., விதிமுறையில், 'ஆசிரியர் தகுதி தேர்வை, ஆண்டுக்கு ஒரு முறையாவது நடத்த வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை, 2012, ஜூலையில், முதல் டி.இ.டி., தேர்வு நடந்தது.அதில், 2,500 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றதால், அதே ஆண்டு அக்டோபரில், மறுதேர்வு நடத்தப்பட்டது. பின், கடந்த 2013, ஆகஸ்ட்டில், மூன்றாவது டி.இ.டி., தேர்வு நடந்தது.
         Visit கல்விக்குயில் For
    No1Edu&Employ News In TN.
நடப்பு ஆண்டில், இதுவரை, புதிய டி.இ.டி., தேர்வு நடத்தவில்லை.நடப்பு ஆண்டு முடிய, இன்னும் நான்கு மாதங்களே உள்ளன. தேர்வு குறித்த அறிவிப்பை, குறைந்தது, இரு மாதங்களுக்கு முன் வெளியிட வேண்டும். அதன்படி, அக்டோபர், நவம்பர் மாதத்தில் தேர்வு நடத்துவதாக இருந்தால், தற்போது, அறிவிப்பு வெளியாகி இருக்க வேண்டும். ஆனால், இதுவரை அறிவிப்பு வெளியாகவில்லை.

சிக்கல்: 

         Visit கல்விக்குயில் For
      No1Edu&Employ News In TN.
கடந்த ஆண்டு நடந்த டி.இ.டி., தேர்வில், தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியலை, கடந்த மாதம் தான், டி.ஆர்.பி., வெளியிட்டது. தற்போது, பணி நியமனம் துவக்கப்பட்ட நிலையில், பல்வேறு வழக்குகள் காரணமாக, பணி நியமனத்திற்கு, சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை, இடைக்கால தடை விதித்ததால், இன்றுவரை சிக்கல் தொடர்கிறது. இந்நிலையில், நடப்பு ஆண்டில், மேலும் ஒரு புதிய டி.இ.டி., தேர்வு நடத்த வாய்ப்பு இல்லை என, கூறப்படுகிறது.
இது குறித்து, டி.ஆர்.பி., வட்டாரத்தில்,'ஏற்கனவே நடந்த தேர்வு பிரச்னையே, இன்னும் தீரவில்லை. இதனால், புதிய தேர்வு குறித்து, இதுவரை சிந்திக்கவில்லை' என, தெரிவித்தனர்.இதனால், புதிய தேர்வை எதிர்பார்த்து காத்திருக்கும் பட்டதாரிகள், ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
பட்டதாரிகள்:
         Visit கல்விக்குயில் For
     No1Edu&Employ News In TN.

இதுகுறித்து, பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச்செயலர், பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறியதாவது:ஆண்டுக்கு, ஒரு டி.இ.டி., தேர்வையாவது, கண்டிப்பாக நடத்த வேண்டும். பல ஆயிரக்கணக்கான பட்டதாரிகள், வேலையின்றி உள்ளனர். அவர்களுக்கு, அரசு பள்ளிகளில் வேலை வாய்ப்பு கிடைக்காவிட்டாலும், தனியார் பள்ளிகளில் வேலையில் சேர, டி.இ.டி., தேர்வு உதவும்.இவ்வாறு, அவர் கூறினார்.

17 comments:

  1. கல்விக்குயில் பார்வையாளர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம், இன்றிலிருந்து ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு தங்களுடைய கருத்துக்களை(Comments) Admin பார்வையிட்ட பிறகே பதிவேற்றம்(Published) செய்யப்படும் என்று தெரிவித்துக்கொள்கிறோம்.ஏனென்றால் சிலர் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்த முயற்ச்சிக்கிறார்கள் அதை தவிர்க்கவே இந்த முறை பயன்படுத்தப்படுகிறது அதற்க்காக வருந்துகிறோம்.

    ReplyDelete
  2. Hi kk friends good morning how u then share your first time School experience wr r u kk friends like bharathi, prathabsingh,light spectra, poonkodi,Deepa, rk susi,yathavkumar,ramesh tvm and CKRCKR and many more kk friends .....................

    ReplyDelete
    Replies
    1. sir, I am joined in Sathanur GSS School as a Eco Teacher, The area is good atmosphere and students have more respects and regards on teachers and strength also good.

      Delete
    2. sir, I am joined in Sathanur GSS School as a Eco Teacher, The area is good atmosphere and students have more respects and regards on teachers and strength also good.

      Delete
    3. Very nice ramesh thanks for your experience share here and keep touch with our kk friends

      Delete
  3. We r here mr.selva last we had a new experience in school, little bit struggling in language since we were in mat school. Children were happy seeing there new teachers.

    ReplyDelete
    Replies
    1. Hi sir very nice to see your comments here after a week and thanks to share your school experience here and keep touch with kk friends always.

      Delete
  4. Hi mr.bharathi, yathav,rk.susi,ete we expect u all over here today

    ReplyDelete
  5. SUITABLE/PREFERABLE/ACCEPTABLE NEW MODE OF TET WEIGHTAGE EXPECTED EITHER FROM OUR TN SCHOOL EDN DEPT OR BY HIGH COURT:


    Tet marks 90%
    Empl seniority 5%
    and
    Teaching experience 5%

    Or

    Tet marks 80%
    UG 5%
    B.Ed 5%
    Empl seniority 5%
    Teaching experience 5%

    Or

    Mere TET marks alone -
    (but giving tet seniority mark for next tet if the tet 2013 candidates produces his/her tet certf in forthcoming tet 2014)

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. Hi frnds I'm very happy The students r quite different and challenging to face though they r very happy I hope al my frnds r happy and satisfied Miles to go guys have a fantastic ride :):):):):)

    ReplyDelete
  8. next week results varum wait pannunga pa

    ReplyDelete
  9. அக்டோபர் முதல் வாரத்தில் TET அறிவிப்பு வெளியாக வாய்ப்பு.....

    ReplyDelete
  10. It is impossible to satisfy all ..problem will be there ..

    ReplyDelete
  11. problem ellam mudincha pinnadi than

    ReplyDelete

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.