WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, November 4, 2014

பள்ளிக்கல்வித்துறை பணியாளர் விபரம்; ஆன்-லைனில் பதிய உத்தரவு

பள்ளிக் கல்வித்துறையின் கீழ் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் விபரங்களை, உடனடியாக ஆன்-லைனில் பதிவு செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அந்த உத்தரவில் கூறியிருப்பதாவது: தனி நபர் தகவல் தொகுப்பில், பதிவு செய்ய வழங்கப்பட்டுள்ள குறியீட்டு எண்ணை பயன்படுத்தி, அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் மற்றும் நடப்பு கல்வியாண்டில் பணியில் சேர உள்ளவர்களின் விபரங்கள் உட்பட அனைத்து விபரங்களையும் பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளதை, கல்வித்துறை அதிகாரிகள் சரிபார்க்க வேண்டும்.சம்பந்தப்பட்ட மாவட்டக்கல்வி மற்றும் தொடக்கக்கல்வி அலுவலர்களும், பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் காலிப்பணியிடங்கள் குறித்த விபரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும். தலைமையாசிரியர்கள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் இப்பணியில் தனிக்கவனம் செலுத்த வேண்டும்.இவ்வாறு, உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள் ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.