WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, November 4, 2014

ஆசிரியர் தேர்வு வாரியம்: கல்லூரி உதவி பேராசிரியர்கள் நியமன பட்டியல் வெளியீடு

ஆசிரியர் தேர்வு வாரியம்:

கல்லூரி உதவி பேராசிரியர்கள் நியமன பட்டியல் வெளியீடு

சென்னை, அக்.4-

தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாகக்கிடக்கும் உதவி கல்லூரி பேராசிரியர்கள் பணியிடங்களுக்கு ஆசிரியர்களை தேர்ந்து எடுக்க அரசு முடிவு செய்தது. இதையொட்டி ஆசிரியர்களை தேர்வு செய்யும் பணியை ஆசிரியர்தேர்வு வாரியத்திடம் உயர்கல்வித்துறை ஒப்படைத்தது.

இதற்காக சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு மற்றும் நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டன. தற்போது ஆங்கிலம், தாவரவியல், விலங்கியல், அக்குவா கல்சர் ஆகிய பாடங்களில் தேர்ந்து எடுக்கப்பட்ட 277 பேர் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த தகவலை ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.