புதுச்சேரி: பெரிய காலப்பட்டிலுள்ள ஜவகர் நவோதயா வித்யாலயா
பள்ளியில், 6ம் வகுப்பு சேர்க்கைக்கு, நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பள்ளி முதல்வர் வினையத்தான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பள்ளியின், 2015-16ம் கல்வியாண்டில், 6ம் வகுப்பில் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வுக்கு, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், அக்டோபர் 31ம் தேதிக்குள் வந்து சேர வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
டில்லியிலுள்ள நவோதயா வித்யாலயா சமிதியின் தலைமை அலுவலகத்திலிருந்து வந்த ஆணைப்படி, தற்போது, விண்ணப்பங்கள் புதுச்சேரி கல்வித்துறையின் வட்டாரக் கல்வி அலுவலர்களிடமிருந்து வந்து சேரவேண்டிய கடைசி தேதி, வரும் 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.