WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, November 22, 2014

பள்ளி கல்வித்துறையில் ராஜராஜேஸ்வரி இயக்குனராக பதவி உயர்வு

பள்ளி கல்வித்துறையில் உள்ள அரசு தேர்வுகள் இயக்குனரகத்தில் இணை
இயக்குனராக பணியாற்றி வந்தவர் ராஜராஜேஸ்வரி. இவர் நேற்று பதவி உயர்வு பெற்று இயக்குனரானார்.

இதற்கான உத்தரவை பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா பிறப்பித்தார். ராஜராஜேஸ்வரி ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினராக நியமிக்கப்பட்டார். ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் க.அறிவொளி அங்கிருந்து மாற்றப்பட்டு அனைவருக்கும் கல்வி திட்ட இடைநிலைகல்வி இயக்குனராக நியமிக்கப்பட்டார். இவர்கள் இருவரும் நேற்று பதவி ஏற்றனர்.

1 comment:

  1. வேண்டுகோள் கவனஈர்ப்பு உண்ணாவிரதம்
    மாண்புமிகு இதயதெய்வம் மக்கள் முதல்வர் அம்மா அவர்களின் கனிவான பார்வைக்கும் ,மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் மேலான பார்வைக்கும் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும் என்ற உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் உத்தரவுகளை நடைமுறைபடுத்தக் கோரி ஒரு நாள் கவன ஈர்ப்பு உண்ணா விரதப் போராட்டம்.
    தேதி: 24.11.2014,திங்கள்கிழமை
    நேரம் :காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை
    இடம் : சேப்பாக்கம்,சென்னை அரசு விருந்தினர் மாளிகை அருகில்
    23.08.2010 நடவடிக்கைக்குட்பட்டு பழைய நடைமுறையில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து நியமனம் பெற்றவர்கள் போக நிலுவையில் உள்ள சுமார் 8000 பட்டதாரி ஆசிரியர்களுக்கு கட்டாய கல்விச்சட்டம் ClauseV வழிக்காட்டுதல்படி நியமனம் வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற இருநபர் நீதிபதிகள் கொண்ட அமர்வில் உத்தரவு வழங்கி உள்ளது (R.A No 139/2012 and W.A No 2121/2012 Date:09.07.2013).இதனை உறுதி செய்து மதுரை உயர்நீதிமன்ற கிளையும் உத்தரவு வழங்கி உள்ளது.இதன் அடிப்படையில் உச்சநீதிமன்றமும் சிறப்பு விசாரணை மூலம் உத்தரவு வழங்கி உள்ளது ( SLP 3860-3861 Date:23.09.2014 )என்பது குறிப்பிடத்தக்கது
    இப்படிக்கு
    தமிழ்நாடு புவியியல் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் பதிவு எண் 77/2009
    வேலையில்லா தமிழ் பட்டதாரி ஆசிரியர் சங்கம் பதிவு எண் 208/2007
    பதிவுமூப்பு பட்டதாரி ஆசிரியர் சங்கம் பதிவு எண் 24/2007
    அனைவரும் தவறாமல் உண்ணா விரதப் போராட்டத்தில் கலந்து கொண்டு நமது நியாயமான கோரிக்கையினை வென்றெடுக்க பாடுபடுவோம்!

    ReplyDelete

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.