WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, December 26, 2014

கற்றல் திறனை மேம்படுத்தும் வழிமுறைகளை இணையத்தில் பதிவுசெய்ய ஆசிரியர்களுக்கு அழைப்பு

                                        


அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளை, கல்வித்துறை இணையதளத்தில் பதிவு செய்யலாம் என, ஆசிரியர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2012 முதல், பள்ளிகளில் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு, முப்பருவ கல்வி முறை செயல்படுத்தப்படுகிறது. இதில், மாணவர்களை முழுமையாக ஈடுபடுத்தவும், அவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தவும், பல்வேறு வழிமுறைகளை, ஆசிரியர்கள் கையாண்டு வருகின்றனர்.

கற்றலில் பின்தங்கிய மாணவர்களை கண்டறிவது, அவர்களின் தனித்திறனை வளர்ப்பது, புதுமையான முறையில் பாடம் நடத்துவது போன்ற வழிமுறைகளை அரசு பள்ளி ஆசிரியர்கள் பின்பற்றுகின்றனர்.

தமிழ், ஆங்கில பாடங்களில் வாசித்தல், எழுதுதல் மற்றும் அடிப்படை கணிதம் உள்ளிட்டவற்றை மேம்படுத்தும் முயற்சியில், ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

ஆசிரியர்கள் பின்பற்றும் வெற்றிகரமான, புதுமையான முயற்சிகளை, அனைத்து பள்ளி ஆசிரியர்களும் தெரிந்து, பயன்படுத்த விரும்பியுள்ள கல்வித்துறை, அவ்வழிமுறைகளை இணையதளத்தில் பதிவு செய்யும்படி அழைப்பு விடுத்துள்ளது.

அதன்படி, tnscert.org/innovation என்ற இணையதளத்தில், ஜன., 15க்குள் பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.