WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, April 25, 2015

முதுகலை பட்டதாரிகளுக்கு மத்திய அரசின் பல்வேறு துறையில் பணி.

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் நிரப்பப்பட உள்ள Scientists, Technical Officer, Sr.Assistant Controller, Dy.Director, Asst.Professor போன்ற பணியிடங்களை
நிரப்புவதற்கான அறிவிப்பை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
Vacancy No. 15040801225
பணி: Scientists SB (Electrical)
காலியிடங்கள்: 02
தகுதி:
இயற்பியல், கணினியியல், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல், டெலிகம்யூனிகேசன், ரேடியோ இயற்பியல் முதுகலை பட்டம் பெற்று 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,200 + தரஊதியம் ரூ.5,400 + இதர சலுகைகள்.
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.  
Vacancy No. 15040802225
பணி: Scientist SB (Non-destructive)
காலியிடங்கள்: 01
தகுதி: இயற்பியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், மெட்டாலார்ஜிக்கல் துறையில் பட்டம் பெற்று 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தரஊதியம் ரூ.5,400 + இதர சலுகைகள்.
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.  
Vacancy No. 15040803425
பணி: Technical Officer (Forestry)
காலியிடங்கள்: 05
தகுதி: புள்ளியியல், வனவியல், பொருளாதாரம் மற்றும் புள்ளியியல், வணிகவியல் மற்றும் புள்ளியியல், கணிதம் மற்றும் புள்ளியியல், விவசாயம் மற்றும் புள்ளியியல் துறையில் முதுகலை பட்டம் பெற்று 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தரஊதியம் ரூ.4,600 + இதர சலுகைகள்.
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.  
Vacancy No. 15040804625
பணி: Sr.Assistant Controller (Mines)
காலியிடங்கள்: 02
தகுதி: பொறியியல் துறையின் மைன்ஸ் பிரிவில் பி.இ அல்லது பி.டெக் பட்டம் பெற்று 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தரஊதியம் ரூ.6,600 + இதர சலுகைகள்.
வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.  
Vacancy No. 15040805425
பணி: Dy.Director (Non-Technical) காலியிடங்கள்: 01
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று பத்து வருடம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தரஊதியம் ரூ.6,600 + இதர சலுகைகள்.
வயதுவரம்பு: 45க்குள் இருக்க வேண்டும்.  
Vacancy No. 15040806325
பணி: Asst.Professor (English) காலியிடங்கள்: 01
தகுதி: ஆங்கிலத்தில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தரஊதியம் ரூ.6,600 + இதர சலுகைகள்.
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.  
விண்ணப்பக் கட்டணம்: 25. இதனை நெட்பேங்கிங் மூலமும் செலுத்தலாம். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.05.2015 ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 15.05.2015 மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://upsc.gov.in/recruitment/advt/2015/Advt_08_2015.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.