WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, May 2, 2015

தொடக்கக் கல்வியில் மாணவர்களின் இடைநிற்றல் 4 சதவீதமாக அதிகரிப்பு?

தொடக்கக் கல்வியில் மாணவர்களின் இடைநிற்றல் கடந்த 10 ஆண்டுகளில் 4.1
சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த 2005-06-ஆம் ஆண்டில் இருந்து 2013-14-ஆம் ஆண்டு வரை தொடக்கக் கல்வி தொடர்பாக மாவட்ட கல்வித் தகவல் முறையில் சேகரிக்கப்பட்ட புள்ளி விவரங்களை தேசிய கல்வித் திட்டமிடல், நிர்வாகப் பல்கலைக்கழகம் ஆய்வு செய்து முடிவுகளை வெளியிட்டுள்ளது. அந்த முடிவுகளின் விவரம்: அதில் கடந்த 2005-06-ஆம் ஆண்டில் தொடக்கக் கல்வியில் 2 சதவீதமாக இருந்த மாணவர்களின் இடைநிற்றல் 2013-14-ஆம் ஆண்டில் 4 சதவீதமாக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான தொடக்கக் கல்வியில் இருந்து 6-ஆம் வகுப்பு உள்ளிட்ட வகுப்புகளுக்குச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை 95.4 சதவீதமாக உள்ளது. ஆசிரியர் மாணவர் விகிதம் குறைவு: கடந்த 2005-06-ஆம் ஆண்டில், தொடக்கக் கல்வித் துறையில் 3 லட்சத்து 31,513 ஆக இருந்த ஆசிரியர்களின் எண்ணிக்கை 2013-14-ஆம் ஆண்டில் 5 லட்சத்து 8 ஆயிரத்து 788 ஆக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, ஆசிரியர் மாணவர் விகிதம் 1:29 என்பதில் இருந்து 1:18 என்ற அளவுக்குக் குறைந்துள்ளது. அதாவது 18 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற அளவில் இது குறைந்துள்ளது. தமிழகத்தில் 5 ஆயிரம் புதிய பள்ளிகள்: தமிழகத்தில் உள்ள பள்ளிகளின் எண்ணிக்கை 2006-07-ஆம் ஆண்டில் 51,574-என்பதில் இருந்து 2013-14-ஆம் ஆண்டில் 56,784-ஆக அதிகரித்துள்ளது. அதாவது, இந்த ஆண்டுகளில் தமிழகத்தில் புதிய பள்ளிகளின் எண்ணிக்கை 5 ஆயிரம் அதிகரித்துள்ளது. இதில், அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை 67 சதவீதத்தில் இருந்து 65.2 சதவீதமாகக் குறைந்துள்ளது. தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை 33 சதவீதத்தில் இருந்து 34.8 சதவீதமாக அதிகரித்துள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.