WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, May 2, 2015

பணியாளர்கள் இடமாறுதலுக்கு விண்ணப்பிக்கலாம்’.

அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும்
சிறப்பு பயிலகங்களில் பணியாற்றும் ஆசிரியர் அல்லாத தொழில்நுட்ப பணியாளர்கள், அமைச்சுப் பணியாளர்களுக்கு நடப்பு கல்வி ஆண்டில் (2015-16) கலந்தாய்வு முறையில் இடமாறுதல் அளிக்கப்பட உள்ளது. இதற்கான விண்ணப்ப படிவங்கள் அனைத்து கல்லூரிகளுக்கும் அனுப்பப்பட் டுள்ளன. சம்பந்தப்பட்ட கல்லூரி களின் முதல்வர்கள் பணியாளர் களிடம் இருந்து விண்ணப்பங் களைப் பெற்று உரிய குறிப்புரை மற்றும் பரிந்துரைகளுடன் மே மாதம் 11-ம் தேதிக்குள் தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்துக்கு அனுப்ப வேண்டும். இடமாறுதல் கலந்தாய்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அரசு பொறியியல், பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் மாநில தொழில்நுட்பக் கல்வி ஆணையர் பிரவீண்குமார் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.