WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, June 4, 2015

பிளஸ் 2 பாடங்களை தொடர்ந்து படித்து வாருங்கள் பொறியியல் படிப்பில் சேரவுள்ள மாணவர்களுக்கு அறிவுரை

பிளஸ் 2 பாடங்களை தொடர்ந்து படித்து வருமாறு பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் அறிவுரை வழங்கினார். இந்த ஆண்டு பொறியியல் படிப்பில் சேர ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 545 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று பொறியியல் படிப்பில் சேரும் சிறந்த மாணவர்கள்கூட முதல் ஆண்டு செமஸ்டர் தேர்வில் தோல்வி அடையும் சம்பவங்கள் ஆண்டுதோறும் நடந்த வண் ணம் உள்ளன. பாடத்தில் சொல் லப்பட்டுள்ள விஷயங்களை சரியாக புரிந்துகொள்ளாமல் குருட்டு மனப்பாடம் செய்வதால் இதுபோன்று அதிக மதிப்பெண் பெற்றவர்கள்கூட தேர்வில் தோல்வி அடைகிறார்கள் என்ற கருத்து பரவலாக இருந்து வருகி றது. இதுகுறித்து அண்ணா பல் கலைக்கழக பேராசிரியரும் தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளருமான வி.ரைமன்ட் உத்தரியராஜ் கூறிய தாவது: பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்கள் முதல் ஆண்டில் செமஸ்டர் தேர்வில் தோல்வி அடைவதற்கு பல்வேறு காரணங் கள் உள்ளன. பாடத்தின் அடிப்படை விஷயத்தை புரிந்துகொள்ளாமல் மனப்பாடம் செய்தது ஒரு காரண மாக இருக்கலாம். பொதுவாக பிளஸ் 2 மாணவர்கள் வீட்டில் பெற்றோரின் நேரடி மேற்பார்வை யில் இருப்பதால் அன்றைக்குரிய பாடங்களை அன்றே படித்துவிடு வார்கள். வகுப்பிலும் தினசரி தேர்வு நடத்தப்படும். ஆனால், பொறியியல் கல்லூரி யில் சேரும் மாணவர்களின் நிலை வேறு. முதலாவதாக அவர்கள் பெற்றோரின் கட்டுப்பாட்டிலிருந்து விடுபட்டிருப்பார்கள். சுதந்திரமான சூழலில் இருப்பார்கள். பள்ளி யில் இருப்பதைப் போன்று கல்லூரியில் தினசரி தேர்வு நடத்தமாட்டார்கள். எனவே, பல மாணவர்கள் தேர்வுக்கு சில நாட்களுக்கு முன்னர் மொத்தமாக பாடங்களை படிப்பார்கள். எந்தவிதமான நிர்ப்பந்தமும் இல்லாமல் பாடங்களை சுயமாக படித்த மாணவர்களுக்கு எவ்விதப் பிரச்சினையும் இருப்பதில்லை. இன்னொரு முக்கிய காரணம், மாணவர்கள் பிளஸ் 2 தேர்வை மார்ச் மாதத்திலேயே முடித்துவிடுகின்றனர். சுமார் 4 மாத காலத்துக்கு பாடங்களுடன் அவர்களுக்கு தொடர்பே இருக் காது. பிறகு ஆகஸ்ட் மாதம் கல்லூரிக்கு வருகிறார்கள். அப் போது பொறியியல் படிப்புக்கு அடிப்படையான பிளஸ் 2 கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங் களை அவர்கள் மறந்திருக்கலாம். இந்த நிலையைத் தவிர்க்க, பொறியியல் படிப்பில் சேரவுள்ள மாணவர்கள் முன்பு படித்த பிளஸ் 2 கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களை தினமும் படித்து வந்தால் பொறியியல் படிப்பில் சேரும்போது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு பேராசிரியர் ரைமன்ட் உத்தரியராஜ் கூறினார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.