WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, June 5, 2015

ஆனர்ஸ் சட்டப் படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பம் தமிழ்நாடு சட்டப் பல்கலைக்கழகம் அறிவிப்பு

ஆனர்ஸ் சட்டப் படிப்புகளுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் விண்ணப்பம் வழங்கப்படும் என்று தமிழ்நாடு சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 

சென்னையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் இயங்கி வரும் சீர்மிகு சிறப்பு சட்டக் கல்லூரியில் நடத்தப்படும் ஐந்தாண்டு கால ஆனர்ஸ் சட்டப் படிப்புகளுக்கு (பிஏ.எல்எல்பி, பிகாம்.எல்எல்பி, பிசிஏ.எல்எல்பி) இன்று முதல் விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளன. 

விண்ணப்பக் கட்டணம் ரூ.1,000. எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு ரூ.500. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூன் 22-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இதற்கான தரவரிசைப்பட்டியல் ஜூன் 25-ந் தேதி அன்று வெளியிடப்படும். இதேபோல், ஐந்தாண்டு கால எல்எல்பி ஆனர்ஸ் படிப்புக்கு இன்று முதல் 30-ம் தேதி வரை விண்ணப்பம் வழங்கப்படும். தரவரிசைப்பட்டியல் ஜூலை 10-ம் தேதி வெளியாகும். சென்னை, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட இடங்களில் உள்ள அரசு சட்டக் கல்லூரிகளில் ஐந்தாண்டு எல்எல்பி படிப்பில் சேருவதற்கான விண்ணப்பங்கள் ஜூன் 8-ம் தேதி தொடங்கி 29-ம் தேதி வரை விநியோகிக்கப்படும். விண்ணப்பக் கட்டணம் ரூ.500. எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு ரூ.250. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஜூன் 29-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இதற்கான தரவரிசைப் பட்டியல் ஜூலை 13-ந் தேதி அன்று வெளியிடப்படும். மேலும், அரசு சட்டக் கல்லூரிகளில் 3 ஆண்டு கால எல்எல்பி படிப்புக்கு ஜூன் 12 முதல் ஜூலை 17-ந் தேதி வரை விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூலை 17-ந் தேதி ஆகும். இதற்கான தரவரிசைப் பட்டியல் ஜூலை 31-ந்தேதி வெளியிடப்படும் என்று சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.