WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, August 12, 2015

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள், அக்டோபர், 8ம் தேதி ஒரு நாள் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளனர்

ஆசிரியர்களின், 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக அரசுக்கு
எதிராக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள், அக்டோபர், 8ம் தேதி ஒரு நாள் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளனர். அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களின், 24 சங்கங்கள் இணைந்து, 'ஜேக்டோ' என்ற கூட்டு நடவடிக்கைக்குழுவை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இக்கூட்டுக்குழுவின் ஆலோசனைக் கூட்டம், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலாளர் ரெங்கராஜன் தலைமையில் நேற்று நடந்தது. இதில், வரும் அக்டோபர், 8ம் தேதி வியாழக்கிழமை, அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களும் ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டதாக, ரெங்கராஜன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.