4 ஆண்டுகளில் 72 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக கல்வி
அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மாநிலம் முழுவதும் உள்ள குழந்தைகளுக்கு தரமான கல்வி அளிப்பதற்கும், அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பாதுகாப்பான சூழ்நிலையில் குழந்தைகள் கல்வி கற்கும் வசதியை அளிப்பதற்கும் தமிழக அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. அனைவருக்கும் தரமான கல்வியை வழங்குவது என்ற அரசின் நோக்கத்தின் ஒரு அங்கமாக பள்ளிகளை தரம் உயர்த்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டார்.
தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகளாகவும், நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிகளாகவும், உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டன. கடந்த 4 வருடங்களில் புதிதாக 72 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அரசு பள்ளிக்கூடங்களில் புதிய வகுப்பறைகள் ஆயிரக்கணக்கில் கட்டப்பட்டுள்ளன.
அனைவருக்கும் கல்வித்திட்டம், இடைநிலை கல்வி திட்டம், நபார்டு ஆகியவற்றின் சார்பில் தமிழ்நாட்டில் கழிவறை வசதி இல்லாத பள்ளிகளில் கழிவறை கட்டப்பட்டு உள்ளன. 95 சதவீத பள்ளிகளில் கழிப்பிடவசதி உள்ளன.
மீதம் உள்ள 5 சதவீத பள்ளிகளில் என்.எல்.சி. போன்ற நிறுவனங்கள் மூலம் கட்டப்பட்டு வருகின்றன. அந்தப்பணி இன்னும் 2 மாதங்களில் முடிவடையும்.
இந்த தகவல்களை கல்வி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.