WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, October 18, 2015

31-ல் போராட்டம்'ஜாக்டோ' முடிவு.

'ஜாக்டோ' என, அழைக்கப்படும், அரசு ஆசிரியர் சங்க கூட்டுக்குழுவின், மாநிலப்
பொதுக்குழுக் கூட்டம், 31ம் தேதி, சென்னையில் நடக்கிறது. இதில் அடுத்த கட்ட போராட்டம் குறித்து, முடிவு எடுக்கப்பட உள்ளது.அரசு மற்றும் அரசு உதவிப் பள்ளி ஆசிரியர்களின், 27 சங்கங்கள் இணைந்து, ஜாக்டோ கூட்டுக்குழுவை ஏற்படுத்தியுள்ளன. இந்தக் குழு, இதுவரை நான்கு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டுள்ளது. இதில், 8ம் தேதி நடந்த மாநில அளவிலான வேலை நிறுத்தம் வெற்றி பெற்றது.ஆனாலும், அரசு கண்டு கொள்ளவில்லை; பேச்சுக்கும் அழைக்கவில்லை. இதனால், அதிருப்தி அடைந்துள்ள ஜாக்டோ நிர்வாகிகள், அடுத்த கட்ட போராட்டம் குறித்து முடிவெடுக்க, 31ம் தேதி சென்னையில் ஆலோசனை நடத்த உள்ளனர். இத்தகவலை, ஜாக்டோ ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன் தெரிவித்து உள்ளார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.