WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, October 18, 2015

பட்டப்படிப்பை முடிக்க யு.ஜி.சி., புதிய கெடு

                                                



படிப்பு காலம் தவிர கூடுதலாக, மூன்று ஆண்டுக்குள்   தேர்ச்சி பெற்றால் மட்டுமே, ரேங்கிங் வழங்கப்படும்       என, பல்கலைகளுக்கு, பல்கலை மானியக்குழுவான, யு.ஜி.சி, அறிவித்துள்ளது.


இளங்கலை மற்றும் முதுகலை உள்ளிட்ட பட்டப்படிப்புகள் படிப்போர், பல காரணங்களால், இடையில் படிப்பை விட்டாலோ, சில பாடங்களில் தேர்ச்சி அடையா விட்டாலோ, ௧௦ ஆண்டுகளுக்குள் மீண்டும் தேர்வு எழுதி தேர்ச்சி பெற முடியும். இந்த காலநீட்டிப்பு பல்கலைக்கு பல்கலை, கல்லுாரிக்கு கல்லுாரி மாறுபடும். இந்த நிலையில், யு.ஜி.சி., புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 


அதில், இளங்கலை அல்லது முதுகலை படிப்பில், அதற்கான கால அளவுக்குள் படிப்பை முடிக்க வேண்டும். முடிக்காதவர்கள், இரண்டு ஆண்டுகளில் முடிக்கலாம். அதையும் தாண்டினால், ஓர் ஆண்டு கூடுதலாக வழங்க முடியும். அதற்கு மேல் கால தாமதம் ஆனால், அந்த பட்டத்துக்கு, ரேங்கிங் வழங்கக் கூடாது என, உத்தரவிட்டுள்ளது. இந்த அறிவிப்புக்கு கல்லுாரி ஆசிரியர்களிடம் எதிர்ப்பு எழுந்துள்ளது. 


அவர்கள் கூறியதாவது:


எப்படியாவது படிக்க வேண்டும் என முயற்சி எடுப்போர் மட்டுமே, தேர்வை இடைவெளி விட்டு எழுதியாவது பட்டம் பெறுவர். அந்த வாய்ப்பு மறுக்கப்படுவோருக்கு இந்த உத்தரவு, பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.