வரும் 8ம் தேதி, ஜாக்டோ சார்பில் நடக்கும் ஒரு நாள் வேலை நிறுத்தப்
போராட்டத்தில், 7,000 ஆசிரியர்கள் பங்கேற்க வேண்டும்' என, ஆயத்தக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (ஜாக்டோ) சார்பில், ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்ட ஆயத்தக் கூட்டம், நாமக்கல்லில் நடந்தது. நாமக்கல் மாவட்ட ஜாக்டோ ஒருங்கிணைப்பாளர் மலர்க்கண்ணன் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் செல்வகுமார் வரவேற்றார். தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச் செயலாளர் (பொறுப்பு) செல்வராஜ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், 15 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, வரும், 8ம் தேதி ஜாக்டோ நடத்தும், ஒரு நாள் முழு அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில், 7,000 ஆசிரியர்கள் பங்கேற்க வேண்டும். அன்று காலை, 11 மணிக்கு, நாமக்கல் பூங்கா சாலையில் நடக்கும் கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டத்தில், அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில துணைத் தலைவர் சரவணமுத்து, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டச் செயலாளர் பாலகிருஷ்ணன் உள்பட பல்வேறு ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.