WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, October 26, 2015

'ஜாக்டா' போராட்டத்துக்கு கலையாசிரியர்கள் ஆதரவு.

ஆசிரியர்களின் பல்வேறு கட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 'ஜாக்டா' எனும்,
21 ஆசிரியர்கள் சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில், டிச., 4ல், சென்னை பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு, தமிழ்நாடு கலையாசிரியர்கள் சங்கம் ஆதரவு தெரவித்துள்ளது. தமிழ்நாடு கலையாசிரியர்கள் சங்க, பொதுக் குழு கூட்டம் நேற்று நடந்தது. மாநிலத்தலைவர் ராஜ்குமார் தலைமை வகித்தார். இதில், 'பண்டிகை முன்பணத்தை தாமதமின்றி, 20 ஆயிரமாக உயர்த்தி வழங்குதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபடவுள்ள ஜாக்டா ஆசிரியர் சங்கத்துக்கு ஆதரவு தெரிவித்தல் உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.