WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, October 26, 2015

பண்டிகை முன்பணம்: பகுதி நேர ஆசிரியர்கள் கோரிக்கை.

'சக ஆசிரியர்களை போன்று பகுதி நேர ஆசிரியர்களுக்கும் பண்டிகை
முன்பணம் வழங்கவேண்டும்' என, தமிழ்நாடு கலையாசிரியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழக அரசு பள்ளிகளில் பணிபுரியும், ஆசிரியர்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை பண்டிகை முன்பணம், 5,000 ரூபாய் வழங்கப்படும். இதில், 80 சதவீதத்தினர், தீபாவளி கொண்டாட்டத்துக்கே முன்பணம் வேண்டி விண்ணப்பிப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாநிலம் முழுவதும், அரசு மேல்நிலைப்பள்ளிகளில், 16 ஆயிரம் பேர் பகுதி நேர ஆசிரியர்களாக, 7,000 ரூபாய் தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இந்த ஊதியம், அன்றாட செலவுகளுக்கே போதாத நிலையில், பண்டிகை நேரங்களில் அல்லல்படும் சூழல் உள்ளது. இதனால், பகுதிநேர ஆசிரியர்களின் நிலை கருதி, பகுதி நேர ஆசிரியர்களுக்கும் பண்டிகை முன்பணம் வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு கலையாசிரியர்கள் சங்க மாநிலத்தலைவர் ராஜ்குமார் கூறுகையில், ''முன்பணம் என்பது, ஊதியத்தில் முறையாக பிடித்தம் செய்யப்படுகிறது. இனமாக வழங்கப்படவில்லை எனும் சூழலில், பகுதி நேர ஆசிரியர்களுக்கும் வழங்க அரசு முன்வரவேண்டும்,'' என்றார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.