WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, October 23, 2015

முக்கிய செய்தி: அரசு பள்ளிகள் இன்று இயங்கும்.

"மொகரம் பண்டிகைக்கு, நாளை அரசு விடுமுறை என்பதால், பள்ளிகள் இன்று
வழக்கம்போல் செயல்படும்' என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இம்மாதம், 21ல் ஆயுத பூஜை, 22ல் விஜயதசமி, 23ல் (இன்று) மொகரம் என, மூன்று நாட்கள் அரசு விடுமுறை, சனி மற்றும் ஞாயிறு வார விடுமுறை என, ஐந்து நாட்கள், விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இன்று கொண்டாட இருந்த மொகரம் பண்டிகை, நாளை மாற்றப்பட்டு, அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று, மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் செயல்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அரசு பள்ளிகளுக்கு அறிவிக்கப்பட்டிருந்த விடுமுறை ரத்து செய்யப்பட்டு, இன்று வழக்கம்போல் செயல்படும். கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், "தீபாவளி பண்டிகை வர உள்ளதால், தென்மாவட்டங்களை சேர்ந்த மக்கள் அதிகளவில் உள்ள திருப்பூரில், வெளியூர் செல்லும் மாணவர்கள் நலன் கருதி, ஒருநாள் முன்னதாக உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. எனவே, இன்று உள்ளூர் விடுமுறை அளித்து விட்டு, மீண்டும் ஒரு நாளில் வகுப்பு நடத்த இயலாது. அரசு அறிவித்தபடி,இன்று பள்ளிகள் செயல்படும்' என்றனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.