WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, February 6, 2016

மகாமகம் திருவிழா: வரும் 22-இல் தஞ்சை உள்பட 3 மாவட்டங்களுக்கு விடுமுறை.


மகாமகம் திருவிழாவையொட்டி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு வரும் 22-ஆம் தேதி பொது விடுமுறை விடப்படும்
என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து பொதுத் துறை முதன்மைச் செயலாளர் யத்தேந்திர நாத் ஸ்வைன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட உத்தரவு: கும்பகோணத்தில் வரும் 22-ஆம் தேதி மகாமகம் திருவிழா நடத்தப்படுகிறது. அந்த தினத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களுக்கு பொது விடுமுறை விடப்படுகிறது. இந்த தினத்தின் போது, அனைத்து வங்கிகள், தனியார் தொழில் அமைப்புகள், அனைத்துக் கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டிருக்கும். மகாமகம் திருவிழா என்பதால் சிறப்பு நிகழ்வாகக் கருதி கடந்த 1881-ஆம் ஆண்டு செலவாணி முறிச் சட்டத்தின் கீழ், இந்த பொது விடுமுறை விடப்படுகிறது என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. செலவாணி முறிச் சட்டத்தின் கீழ் விடுமுறை விடப்படுவதால், இந்த விடுமுறை ஊதியத்துடன்கூடிய பொது விடுமுறையாகும்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.