WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, February 6, 2016

‘நெட்’ தேர்வுக்கு எம்எஸ்சி பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.


சிஎஸ்ஐஆர் அமைப்பு நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிப்பதாவது: கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் கணிதம் மற்றும் அறி வியல் சம்பந்தப்பட்ட பாடங்களில் உதவி பேராசிரியர் பணியில்
சேருவதற்கு அறிவியல் தொழில் ஆராய்ச்சிக் குழு (சிஎஸ்ஐஆர்) நடத்தும் நெட் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அந்த வகையில் இந்த ஆண்டுக் கான முதலாவது தகுதித்தேர்வு ஜூன் மாதம் 19-ம் தேதி நடை பெற உள்ளது. தமிழகத்தில் சென் னையிலும், காரைக்குடியிலும் தேர்வு நடக்கும். கணிதம், இயற்பி யல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் உள்ளிட்ட பாடங்களில் எம்எஸ்சி பட்டம் பெற்றவர்கள் நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் 55% மதிப்பெண் அவசியம். எஸ்சி, எஸ்டி, மாற்றுத் திறனாளிகளுக்கு 50% மதிப்பெண் போதுமானது. எம்எஸ்சி இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். தகுதியுடையவர்கள் பிப்ரவரி 29-ம் தேதிக்குள் ஆன்லை னில் (www.csirhrdg.res.in) விண்ணப் பிக்க வேண்டும். ஆன்லைன் விண் ணப்பத்தை பிரின்ட் அவுட் எடுத்து போட்டோ ஒட்டி, கையெழுத்திட்டு, தேர்வுக்கட்டணம் மற்றும் தேவை யான இதர ஆவணங்களுடன் மார்ச் 7-ம் தேதிக்குள் டில்லிக்கு அனுப்ப வேண்டும்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.