கௌரவ விரிவுரையாளர்களுக்கு தற்போது வழங்கப்படும் ஊதியம் 10000 ஆகும்.ஆனால் இந்த ஊதியம் மற்ற மாநிலத்தில் அரசு கலைக்கல்லூரிகளில்
பணிபுரியும் கௌரவ விரிவுரையாளர்களுடன் ஒப்பிடுகையில் மிக மிக குறைவாக உள்ளது.அதாவது கேரளா மற்றும் ஆந்திரா மாநிலத்தில் பணிபுரியும் கௌரவ விரிவுரையாளர்களுக்கு யு.ஜி.சி யின் அடிப்படை சம்பளமான 25000 ரூபாயினை கடந்த 2015 ஆண்டு முதல் அந்த மாநிலங்கள் வழங்கிவருகிறது.ஆனால் தமிழக அரசு நிதிப்பற்றாக்குறையைக் காரணம் காட்டி இந்த ஊதியத்தை தமிழக அரசு வழங்க மறுப்பதாலும்,7 வருடங்களுக்கு மேலாக குறைந்த சம்பளத்தில் கல்லூரிகளில் யு.ஜி.சி கேட்கும் தகுதியை பெற்றுள்ள கௌரவ விரிவுரையாளர்களையும்,எம்.பில் முடித்த கௌரவ விரிவுரையாளர்களையும் பணிநிரந்தரம் செய்யாமல் அவர்களை நீக்கிவிட்டு அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் முறைகேடாக கல்லூரி நிர்வாகம் பணத்தை வாங்கிக் கொண்டு சேரத்த விரிவுரையாளர்களை தமிழக அரசு காப்பாற்றி வருவதாலும்,அவர்களை பணியில் சேர்ப்பதற்கு ஏற்றவகையில் சில விதிமுறைகளை திருத்தியுள்ளதாலும் ,அரசின் மீது கௌரவ விரிவுரையாளர்கள் அதிர்ப்தி தெரிவிக்கின்றனர். இந்த பிரச்சினையை மறைக்கும் வகையில் கௌரவ விரிவுரையாளர்களுக்கு சம்பளம் உயர்த்தி வழங்க பரிசீலித்து வருவதாக உயர்கல்வி வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளதாக செய்தி கிடைத்துள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.