அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஷோபனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கிராம நிர்வாக அலுவலரான, வி.ஏ.ஓ., பதவியில், 813 காலியிடங்களுக்கு, 28ம் தேதி, தேர்வு
நடக்க உள்ளது. இதற்கு, 10 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். அதன் விவரம், இணையதளத்தில்
வெளியிடப்பட்டு உள்ளது; சரிபார்த்துக் கொள்ளலாம். சரியான முறையில் விண்ணப்பங்களைப் பதிவு செய்து, உரிய கட்டணம் செலுத்தி, அதன் விவரம் இணையதளத்தில் இல்லாவிட்டால், பணம் செலுத்திய விவரத்தை, அதே இணையதள பக்கத்தில் உள்ள படிவத்தில், பிப்., 7ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அதன்பின் பெறப்படும் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.