WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, February 1, 2016

அரசு பள்ளிகள் இன்று மூடல்?


“தமிழகத்தில் அனைத்து அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளும் இன்று மூடப்படும்,” என தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொருளாளர்
ஜோசப்சேவியர் சிவகங்கையில் தெரிவித்தார். அவர் கூறியதாவது: தமிழக ஆசிரியர்களுக்கு, மத்திய அரசு ஆசிரியருக்கு இணையான சம்பளம், புதிய பென்ஷன் திட்டம் ரத்து உட்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 16 ஆசிரியர் சங்கங்களை சேர்ந்த ஜேக்டோ கூட்டமைப்பு ஜன.,30 முதல் பிப்.,1 வரை மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டத்தை நடத்தி வருகிறது. இன்று நடக்கும் மறியலில் அனைத்து சங்கங்களை சேர்ந்த ஆசிரியர்கள் பங்கேற்கும் விதமாக, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு தொடக்க பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளிகள் இன்று மூடப்படும். சுய உதவி பள்ளிகளையும் மூட வேண்டும் என, பள்ளி நிர்வாகத்திடம் மாநில நிர்வாகிகள் சார்பில் பேசியுள்ளோம், என்றார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.