'மதுரையில் அரசு பள்ளிகளை மூடிவிட்டு மறியலில் பங்கேற்று பெருமளவில் ஆசிரியர்கள் கைதாக வேண்டும்,' என 'ஜாக்டோ' ஆலோசனை கூட்டத்தில் நேற்று சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மதுரையில் இரண்டாம் நாள்
மறியலில் ஈடுபட்ட ஆசிரியர்கள் 580 பேரை போலீசார் கைது செய்து ரிசர்வ்லைனில் தனியார் கல்யாண மண்டபத்தில் போலீஸ் பாதுகாப்பில் அடைத்து வைக்கப்பட்டனர்.
அங்கு, இன்று (பிப்.,1) நடக்கும் மூன்றாம் நாள் போராட்டம் குறித்து ஒருங்கிணைப்பாளர்
சந்திரன், ஆரோக்கியம் தலைமையில் சிறப்பு கூட்டம் நடந்தது. அதில் நிர்வாகிகள் பேசியதாவது:
விடுமுறை நாட்கள் என்பதால் இரண்டு நாட்களாக நடந்த போராட்டத்தில் எதிர்பார்த்த அளவில்
ஆசிரியர்கள் கைதாகவில்லை. பிப்.,1 பள்ளி வேலைநாள். 'போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் இல்லை,' என கல்வித்துறை எச்சரித்துள்ளது. ஆசிரியர்கள்
அச்சப்பட வேண்டாம்.
ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள் அனைவரும் பள்ளிகளை மூடிவிட்டு, கட்டாயம் பங்கேற்க வேண்டும். மாற்றுப் பணியும் செய்யக்கூடாது. ஆசிரியைகள் பெருமளவில் பங்கேற்று அதிக எண்ணிக்கையில் கைதாக வேண்டும்.
'டேக்டோ' எதிர்ப்பு: தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு (டேக்டோ) ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கியதாஸ் கூறுகையில், "மதுரை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் 'டேக்டோ'விற்கு உட்பட்ட 11 சங்கங்களில் ஆசிரி யர்கள் போராட்டத்தில் பங்கேற்கவில்லை. 'ஜாக்டோ' போராட்டத்தால் பள்ளி செயல்பாடு பாதிக்காத வகையில், 'டேக்டோ' ஆசிரியர்கள் பணியில் ஈடுபடுவர்," என தெரிவித்தார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.