WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, February 16, 2016

கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டம் கல்லூரி கல்வி இயக்குனரகம் முற்றுகை.


தமிழகத்திலுள்ள, 83 அரசு கலைக் கல்லுாரிகளில், 3,445 கவுரவ விரிவுரையாளர்கள், 12 ஆண்டுகளாக பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு, மாத ஊதியமாக, 10 ஆயிரம் ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது. பணி நிரந்தரம்
மற்றும் ஊதிய உயர்வு கோரி, கவுரவ விரிவுரையாளர்கள், நேற்று முதல், தொடர் முற்றுகை போராட்டத்தை துவங்கியுள்ளனர். தமிழ்நாடு கவுரவ விரிவுரையாளர் நலச் சங்கத்தைச் சேர்ந்த, நுாற்றுக்கணக்கானோர், நேற்று, சென்னை, டி.பி.ஐ., வளாகத்தில் உள்ள கல்லுாரி கல்வி இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து, ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்; வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.போராட்டம் குறித்து, மாநிலச் செயலர் அருணகிரி, வேலுார் மண்டலத் தலைவர் தங்கராஜ், மதுரை மண்டலத் தலைவர் மோகன் மற்றும், 'நெட், ஸ்லெட்' சங்கத் தலைவர் தங்க முனியாண்டி ஆகியோர் கூறியதாவது: பல்கலை மானியக் குழுவின் பரிந்துரைப்படி, கவுரவ விரிவுரையாளர்களுக்கு, மாதம், 25 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்க வேண்டும்; தற்போதுள்ள, 10 மாத சம்பளம் என்பதை மாற்றி, 12 மாதங்களுக்கும் தர வேண்டும்.அண்ணாமலை பல்கலையில் இருந்து வெளியேற்றப்படும், 700 பேராசிரியர்களை, விதிகளை பின்பற்றாமல், அரசு கல்லுாரிகளில் நியமனம் செய்யக் கூடாது. அவர்களுக்கு பதில், காலியிடங்களில், கவுரவ விரிவுரையாளரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்; அதுவரை, எங்கள் போராட்டம் தொடரும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.