WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, February 19, 2016

பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம்: பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை.


ஆசிரியர்கள் நியமனத்தில் தகுதி தேர்வை ரத்து செய்து பதிவு மூப்பு அடிப்படையில் நியமனம் தொடர வேண்டும் என பதிவு மூப்பு பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளது. இச்சங்கத்தின் மாநில ஆலோசனைக் கூட்டம் வடலூரில் திங்கள்கிழமை நடைபெற்றது. மாநில
தலைவர் இரத்தினகுமார் தலைமை வகித்தார். கடலூர் மாவட்ட தலைவர் செல்வராஜ் வரவேற்றார். மாநில பொருளர் அய்யாதுரை முன்னிலை வகித்தார். செந்தில்வேலன், ராஜசேகர், கிருஷ்ணன், ராபின்சன், செம்பையன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர். இனிவரும் காலங்களில் ஆசிரியர் நியமனத்தில் தகுதி தேர்வை ரத்து செய்து பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர் நியமனம் தொடரவேண்டும். எதிர் வரும் 22-ம் தேதி சென்னையில் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றினர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.