WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, February 17, 2016

கவுரவ விரிவுரையாளர்களின் போராட்டம் தீவிரம் கோரிக்கைகளை வலியுறுத்தி டாக்டர்களும் போர்க்கொடி.


கல்லுாரி விரிவுரையாளர்களின் முற்றுகைப் போராட்டம், இன்று முதல் உண்ணாவிரத போராட்டமாக மாறுகிறது; டாக்டர்களும் போராட்டத்தில்
குதிக்கின்றனர். தமிழக அரசு கலை கல்லுாரிகளில், 3,411 கவுரவ விரிவுரையாளர் பணியாற்றுகின்றனர். ஆண்டுக்கு, 10 மாதங்களுக்கு மட்டும், மாதம், 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. ஊதியத்தை, ௨௫ ஆயிரம் ரூபாயாக உயர்த்தக்கோரி, நேற்று முன்தினம் சென்னை, டி.பி.ஐ., வளாகத்தில் உள்ள, கல்லுாரி கல்வி இயக்குனர் அலுவலகம் முன், தொடர் முற்றுகை போராட்டத்தை துவங்கினர். நேற்று, இரண்டாம் நாளாக முற்றுகை தொடர்ந்தது. இன்று முதல், காலவரையற்ற உண்ணாவிரத போராட்டமாக மாற்றப்போவதாக, கவுரவ விரிவுரையாளர் நலச்சங்க மாநில தலைவர் செந்தில் குமார் தெரிவித்துள்ளார். அமைதி வழி போராட்டம்'மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வேண்டும்; பெண் டாக்டர்களுக்கு, ஆறு மாத மகப்பேறு கால விடுப்பு மட்டுமின்றி, இரண்டு ஆண்டுகளுக்கு, குழந்தைகள் பராமரிப்பு விடுப்பு வேண்டும்' என, வலியுறுத்தி, அரசு டாக்டர்கள், பட்ட மேற்படிப்பு டாக்டர்கள் சங்கத்தினர் அமைதி வழி போராட்டத்தை துவக்கி உள்ளனர். தமிழகம் முழுவதும் மருத்துவ மனைகளில், நேற்று, கோரிக்கை அட்டைகளை அணிந்து பணியாற்றினர். பிப்., ௧௯ல், சென்னையில், மாநில அளவில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். மாற்றுத்திறனாளிகள் கோட்டை நோக்கி பேரணிசென்னையில், பிப்., ௮, ௯ல், சமூக பாதுகாப்பு ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாற்றுத்திறனாளிகள் போராட்டம் நடத்தினர். 'விரைவில் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்' என, தலைமைச் செயலர் உறுதி அளித்தால், போராட்டத்தை வாபஸ் பெற்றனர். இடைக்கால பட்ஜெட்டில், எந்த அறிவிப்பும் வராததால், இன்று முதல், கோட்டை நோக்கி பேரணி உள்ளிட்ட பல போராட்டங்களை நடத்தப்போவதாக, மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் கூட்டு இயக்கம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.