WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, February 23, 2016

மத்திய அரசுக்கு இணையான சம்பளம் கேட்டு ஆசிரியர்கள் போராட்டம்.


தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (ஜாக்டா) சார்பில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன. புதிய பென்சன் திட்டத்தை ரத்து
செய்தல், மத்திய அரசுக்கு இணையாக இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் தனிக்கல்வி கொள்கை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 18 சங்கங்கள் இணைந்து இந்த போராட்டத்தை நடத்துகின்றன.  சென்னை கல்லூரி சாலையில் உள்ள பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை இன்று நடத்துவதாக அறிவித்து இருந்தனர். அதன்படி ஜாக்டா ஒருங் கிணைப்பாளர் பி.கே.இளமாறன் தலைமையில் சுமார் ஆயிரம் ஆசிரியர்கள் அங்கு திரண்டனர். ஆசிரியர்களின் போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கக்கூடாது என்பதற்காக ஆசிரியர்களை டி.பி.ஐ. வளாகத்திற்குள் போலீசார் அனுமதித்தனர். அங்குள்ள காலி இடத்தில் ஒன்று சேர்ந்த ஆசிரியர்கள் கோஷங்களை எழுப்பினார்கள். நீண்ட காலமாக போராடி வரும் இந்த கோரிக்கையினை அரசு நிறைவேற்றி தர வேண்டும் என போராட்ட குழுவினர் வலியுறுத்தினர். போராட்டத்தில் சென்னை உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆசிரியர்கள் பங்கேற்றனர். ஆசிரியர்கள் ஒட்டு மொத்தமாக டி.பி.ஐ. வளாகத்தில் திரண்டு போராடியதால் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது. இதில் நிர்வாகிகள் கோ.பாக்கியராஜ், ஜான்வெஸ்லி, பழனியபப்ன், தயாளன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.