பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுதேர்வில் முறைகேடுகளை தடுக்க, வினாத்தாள், விடைத்தாளை துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் காரில் கொண்டு
செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 4, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 15ல் துவங்குகின்றன. விடைத்தாளில் மாணவரின் போட்டோ, பார்கோடிங் முறை அமல்படுத்தப்பட்டு உள்ளது. கடந்த காலங்களில், தேர்வு மையத்திற்கு வினாத்தாள்களை, சம்பந்தப்பட்ட பள்ளி அலுவலர்கள் இருசக்கர வாகனம், பஸ்சில் எடுத்து வந்தனர். அதில் முறைகேடு நடக்க வாய்ப்புள்ளதாக புகார் எழுந்ததால், தற்போது, வினாத்தாள் பாதுகாப்பு மையத்திலிருந்து, தேர்வு நடக்கும் மையத்திற்கு, வினாத்தாளை எடுத்து வர, வழித்தட அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இவர்கள், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன், காரில், அன்றைய தேர்விற்கான வினாத்தாளை, தேர்வு மையத்திற்கு எடுத்து வர வேண்டும். பள்ளியில் பாதுகாப்பாக வைத்திருந்து, தேர்வு தொடங்கும் நேரத்தில், மாணவர்கள் முன்னிலையில், வினாத்தாளை பிரிக்க வேண்டும். இதை உறுதிபடுத்த மாணவர்களிடம் கையெழுத்து பெற வேண்டும். தேர்வு முடிந்ததும், விடைத்தாள்கள், தேர்வு எழுதியோர் பற்றிய விபரம், தேர்வுக்கு வராத மாணவர்கள் விடைத்தாள் முகப்பு சீட், தேர்வு எழுதிய மாணவர்களின் முகப்பு சீட்டில் உள்ள ‘ஏ’ படிவம் ஆகியவற்றை தனித்தனியாக கவரில் வைத்து, ‘சீல்’ இட வேண்டும். இதை சேகரித்து வழித்தட அலுவலர்கள், மீண்டும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன், அந்தந்த மாவட்ட கல்வி அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும் என தேர்வுத்துறை இயக்ககம் உத்தரவிட்டுள்ளதாக மாவட்ட கல்வி அலுவலர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.