WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, February 23, 2016

அடுத்தகட்டமாக தற்கொலை போராட்டம் தமிழக அரசு ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்யாவிட்டால்: பதிவு மூப்பு பட்டதாரி ஆசிரியர்கள் எச்சரிக்கை.


ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்யாவிட்டால் அடுத்தக் கட்டமாக விஷம் அருந்தி தற்கொலை செய்து கொள்ளும் போராட்டம் நடத்துவோம் என்று பதிவுமூப்பு பட்டதாரி ஆசிரியர்கள் தமிழக அரசுக்கு எச்சரிக்கை
விடுத்துள்ளனர். தமிழ்நாடு பதிவு மூப்பு பட்டதாரி ஆசிரியர் சங்கம் சார்பில் 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் நேற்று நடைபெற்றது. போராட்டத்துக்கு, ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர் ரத்தினகுமார் தலைமை வகித்தார். இதுகுறித்து சங்கத்தின் மாநில தலைவர் ரத்தினகுமார் அளித்த பேட்டி:வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து 10 ஆண்டுகளுக்கு மேலாக காத்திருக்கும் பி.எட் பட்டதாரிக்கு, ஆசிரியர் தகுதி தேர்வில் 50 மதிப்பெண்கள் சிறப்பு மதிப்பெண்களாக அளிக்க வேண்டும். இனி வரக்கூடிய காலிப்பணியிடங்களில், பதிவு செய்து காத்திருப்போருக்கு முன்னுரிமை அளித்து பணி நியமனம் வழங்க வேண்டும். 2010ம் ஆண்டில் சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட 34 ஆயிரம் பி.எட் பட்டதாரிகளில், பணி நியமனம் பெற்றவர்கள் போக 8 ஆயிரம் பட்டதாரிகளுக்கு தகுதி தேர்வில் விலக்களித்து நேரடியாக பணி நியமனம் செய்ய வேண்டும்.இனி வரும் காலங்களில் தகுதி தேர்வை ரத்து செய்து, பதிவு மூப்பு அடிப்படையிலேயே பணி நியமனம் செய்ய வேண்டும். எங்களது கோரிக்கை நிறைவேறாவிட்டால் அடுத்த கட்டமாக விஷம் அருந்தி தற்கொலை செய்யும் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.