பள்ளி மாணவர்களுக்கு, அரசின் நலத்திட்ட உதவிகள் முழுமையாக சென்றடைந்ததா? என்பது குறித்த விபரங்களை சேகரிக்கும் பணியில், கல்வித்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு,
சீருடை, காலணி, பாடப்புத்தகம், நோட்டுப்புத்தகம் தவிர, ஆறு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு, ஜியாமென்ட்ரி பாக்ஸ், வரைபடம், சைக்கிள், லேப்-டாப்ஆகியவை வழங்கப்படுகின்றன. அடுத்த மாதம், பிளஸ்2 பொதுத்தேர்வு நடக்கும் நிலையில், இலவச திட்டம் சென்றடைந்த மாணவ, மாணவியர் விபரத்தை, மாவட்டம், தாலுகா, ஒன்றியம் வாரியாக சேகரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கல்வித்துறை உயரதிகாரிகள் கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும், மார்ச் இறுதியில், பட்ஜெட்டை ஒட்டி இப்பணி மேற்கொள்ளப்படும். தமிழக அரசின் பதவிக்காலம் நிறைவடைய உள்ளதால், நலத்திட்ட விபரங்கள் குறித்து தகவல் சேகரிக்கப்படுகின்றன என்றனர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.