WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, March 15, 2016

10ம் வகுப்பு பொது தேர்வு இன்று துவக்கம்:முறைகேடுகளை தடுக்க பறக்கும் படை தயார்.


தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு, இன்று துவங்குகிறது. முறைகேடுகளைத் தடுக்க, 7,000 பேர் அடங்கிய பறக்கும் படை
அமைக்கப்பட்டுள்ளது. எஸ்.எஸ்.எல்.சி., எனப்படும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இன்று துவங்குகிறது. காலை, 9:15 மணி முதல், 12:00 மணி வரை தேர்வு நடக்கும். முறைகேடுகள் நடக்காமல் தடுக்க, அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு, அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் ஏராளமானோர், 'சென்டம்' எடுத்தனர். அதை கட்டுப்படுத்த, இந்த ஆண்டு, பாடங்களின் உள்ளே இருந்து சிக்கலான கேள்விகள் இடம் பெறும் என, எதிர்பார்க்கப்படுகிறது.'தேர்வில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால், உரிய விதிகளின் படி தண்டனை வழங்கப்படும். ஒழுங்கீன செயல்களுக்கு உடந்தையாகவோ, ஊக்குவிக்கவோ பள்ளி நிர்வாகம் முயன்றால், தேர்வு மைய அங்கீகாரம் ரத்து; பள்ளி அங்கீகாரம் ரத்து செய்ய பரிந்துரைத்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, தேர்வுத் துறை அறிவித்துள்ளது

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.