தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணியளவில் வெளியிடப்பட்டுள்ளது.
10ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 15-ல் துவங்கி, ஏப்ரல் 13-ல் முடிவடைந்தது. மொத்தம் 10.50 லட்சம்
மாணவ, மாணவிகள் தேர்வில் பங்கேற்றனர். இவர்களில், 7,000 பேர் தமிழ் அல்லாத பிறமொழியை தாய்மொழியாக கொண்டு தேர்வு எழுதினர்.
இதில் விருதுநகர் மாவட்டம் ராசிபுரம் எஸ்.ஆர்.வி., எக்செல் பள்ளியைச் சேர்ந்த மாணவன் சிவகுமார், நாமக்கல் ராசிபுரத்தைச் சேர்ந்த பிரேமசுதா ஆகிய இருவரும் 499 மதிப்பெண்களை பெற்று மாநிலத்தில் முதலிடத்தை பிடித்துள்ளனர்.
மாநில 2-வது இடத்தை கரூர் ஸ்டார் மெட்ரிக் பள்ளி மாணவி பிரதீபா உட்பட 50 பேர் 498 மதிப்பெண் பெற்றுள்ளனர். 3-வது இடத்தை 224 பேர் பெற்றுள்ளனர்.
தேர்வர்கள் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in , www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணைய தளங்களில் தெரிந்து கொள்ளலாம்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்கள், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்கள் மற்றும் பள்ளிகளிலும், மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறியலாம்.
தற்காலிக சான்றிதழ்களை www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் ஜூன் 1 முதல் மாணவர்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலமும், பதிவிறக்கம் செய்த சான்றிதழ்கள் ஜூன் 1-ல் கிடைக்கும் என அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.